சிங்கப்பூரில் 5G சேவை எப்போது தொடங்கும் – அமைச்சர் எஸ் ஈஸ்வரன் விளக்கம்…!!

There will be 5G coverage across at least half of Singapore by the end of 2022, announced the Minister for Communications and Information S Iswaran on Thursday (Oct 17). ( Photo: Yahoo Finance)

2022 ஆம் ஆண்டின் இறுதியில் சிங்கப்பூரின் 50 சதவீத பகுதிகள் முழுவதும் 5 ஜி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிங்கப்பூரின் குறைந்தது 50 சதவீதம் 5 ஜி கவரேஜ் இருக்கும் என்று தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று வியாழக்கிழமை (அக். 17) இதனை தெரிவித்தார்.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) சிங்கப்பூர் டிஜிட்டல் கைத்தொழில் தினத்தில் பேசிய திரு ஈஸ்வரன், சிங்கப்பூருக்கு இரண்டு 5 ஜி நெட்வொர்க்குகள் ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது நிலையான போட்டிக்கு உதவும் என்று கூறினார்.

மேலும், அதிக மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்கள் பங்கேற்பதனால் நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு இது பயனளிக்கும் என்றார்.

இந்த 5ஜி சேவையில் சிங்டெல், ஸ்டார்ஹப் மற்றும் எம்1 ஆகியவை இந்த திட்டத்தில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

நிறுவனங்கள் அதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும், கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி வரை சமர்ப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.