Boon Lay HDB பிளாட்டில் தீ விபத்து.!

Six people were injured and about 100 residents had to be evacuated after a fire engulfed a fourth-floor Boon Lay Housing Board flat. ( Photo : Facebook/Eric Sng Gak Hwa, Facebook/Ian Qaseh)

Boon Lay HDB பிளாட்டில் நான்காவது மாடி குடியிருப்பு தீ விபத்திற்குள்ளானது, இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

திங்கட்கிழமை (ஜூலை 15) இரவு 10.15 மணியளவில் பிளாக் 191-ல் இருந்து இந்த தீ விபத்து சம்பந்தமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்தது.

போலீஸ் உதவியுடன் SDFC அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 6 பேர் Ng Teng Fong General மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து SDFC அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் முகநூல் பதிவில் Eric Sng Gak Hwa என்பவர் சீன மொழியில் “தீ பெரியளவில் ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் மக்களை வெளியேற்ற வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ள வீடியோவில் நான்காம் மாடியில் தீ எரிந்து கொண்டிருந்தது. மேலும் மற்றொரு வீடியோவில் SDFC அதிகாரிகள் தீ அணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.