அடுக்குமாடி குடியிருப்பில் அசைவற்று கிடந்த ஆறு மாத குழந்தை இறப்பு

SHINMIN DAILY

செங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய் கிழமை (டிசம்பர் 28) அன்று ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று அசைவற்ற நிலையில் கிடந்தது.

இறப்புச் சான்றிதழின் படி, இதய செயலிழப்பு காரணமாக அந்த குழந்தை இறந்ததாக
கூறப்பட்டுள்ளது.

இனி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே விமான சேவை – இந்திய மாநிலம் அதிரடி உத்தரவு

அந்த குழந்தை பெண் பணியாளர் பராமரிப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோங் ஜிங் யூ என்ற குழந்தை, செங்காங் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு மூச்சு வரவில்லை என்றும் ஷின் மின் டெய்லி நியூஸ் திங்கள்கிழமை (ஜனவரி 3) செய்தி வெளியிட்டது.

டிசம்பர் 28 அன்று மாலை 6.25 மணியளவில் பிளாக் 158D ரிவர்வேல் கிரசன்ட்டில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதனை அடுத்து மயக்கமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், மருத்துவமனையில் குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

நீர்நாய் ஒன்றைச் சுற்றி வளைத்த 9 காட்டு நாய்கள்… அடுத்து என்ன நடந்தது ? – சிங்கப்பூர் வைரல் வீடியோ