“காணாமல் போன 60 வயது முதியவர் கண்டுபிடிக்கப்பட்டார்”- சிங்கப்பூர் காவல்துறை தகவல்!

Photo: Singapore Police Force Official Twitter Page

“சிங்கப்பூரில் வசித்து வரும் 60 வயது சீன முதியவர், கடந்த ஜூலை 7- ஆம் தேதி அன்று மாலை 04.00 PM மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக ஜலான் செனங் (Jalan Senang) பகுதியில் இருந்துள்ளார். அவர் டார்க் நிற சட்டை (Dark Colour Shirt) மற்றும் பேண்ட் (Long Pants) அணிந்திருந்துள்ளார். இவரைப் பற்றி தகவல்கள் மற்றும் யாரேனும் கண்டால் உடனடியாக 999 என்ற காவல்துறையின் தொலைபேசி எண்னை தொடர்புக் கொள்ளலாம்” என சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force- ‘SPF’) கடந்த ஜூலை 8- ஆம் தேதி அன்று காலை 10.10 AM தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தெரிவித்திருந்தது.

தானா மேரா, டெசாரு இடையேயான படகுச் சேவை தொடங்கியது!

இந்த நிலையில், அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தனது அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் சிங்கப்பூர் காவல்துறை ஜூலை 8- ஆம் தேதி அன்று மதியம் 12.43 PM மணிக்கு குறிப்பிட்டுள்ளது. மேலும், அவரைக் கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி என்று காவல்துறை தெரிவித்துள்ளது.