சிங்கப்பூரில் 6,200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்புகள்

6200 dengue cases reported singapore
NEA Stop Dengue Now/Facebook

சிங்கப்பூரில் செப்.5-ம் தேதி வரையிலான நிலவரப்படி 6,200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு (NEA) கூறியுள்ளது.

டெங்கு கிருமி செரோடைப் 1 (DenV-1) இன் ஆதிக்கமே இந்த டெங்கு சம்பவங்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறதாக சொல்லப்பட்டுள்ளது.

லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட மாடு.. இணையத்தில் கொதித்து எழுந்த இணையவாசிகள்

இதனால் வாராந்திர டெங்கு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பல பெரிய நோய் குழுமங்கள் தொடர்ந்து இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், தற்போது 48 டெங்கு குழுமங்கள் செயலில் உள்ளதாகவும் NEA கூறியுள்ளது.

அவற்றில் 13 பெரிய குழுமங்களும் உள்ளன, ஏனெனில் அந்த குழுமங்களில் 10 க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

குறிப்பிட்டு சொல்லப்பட்ட சில பெரிய குழுமங்கள்: சயின்ஸ் பார்க் டிரைவில் 29 பாதிப்புகளும், லென்டர் லூப்பில் 24 பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெங்கு குழுமங்கள் பரவுவதைத் தடுக்க, நகர சபைகள் மற்றும் டெங்கு பணிக்குழுவின் பங்காளிகள் போன்ற முன்னோடி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக NEA தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

101 வயதிலும் உழைத்து உண்ணும் சிங்கப்பூரின் இரும்பு பெண்மணி – உழைக்கும் வர்க்கத்துக்கு ஓர் அழகிய எடுத்துக்காட்டு