சிங்கப்பூரில் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனையில் 63 பேர் கைது

CNB

சிங்கப்பூரில் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனையில் 63 போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 17 வயது இளையரும் உள்ளடங்குவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பாரபட்சம்: “நல்லது செய்தும் கெட்ட பெயர்” – வைரல் காணொளி

கடந்த டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10 வரை தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

சுமார் S$70,500க்கும் அதிகமான மதிப்புள்ள கடத்தல் பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஹெராயின், ஐஸ் வகை போதைப்பொருள், கஞ்சா மற்றும் கெட்டமைன் உள்ளிட்டவை அடங்கும்.

கிளமென்டி, ஹௌகாங் மற்றும் பொங்கோல் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்றது.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களின் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன என்று CNB தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 12 வயது சிறுவனை ஆறு நாட்களாக காணவில்லை – தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள்