இரு வெளிநாட்டு பணிப்பெண்கள் உயிரிழந்த லக்கி பிளாசா கார் விபத்து – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு..!

64-year-old driver charged over Lucky Plaza car crash that killed two
64-year-old driver charged over Lucky Plaza car crash that killed two

லக்கி பிளாசா ஷாப்பிங் சென்டர் அருகே ஏற்பட்ட கார் விபத்து தொடர்பாக 64 வயது ஓட்டுநர் மீது இன்று புதன்கிழமை (செப்டம்பர் 2) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட இந்த விபத்தில் இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்கள் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

இதையும் படிங்க : “திரு. பிரணாப் முகர்ஜி சிங்கப்பூரின் நல்ல நண்பர்” – பிரதமர் லீ..!

சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல் ஆகியவற்றின் கீழ் சோங் கிம் ஹூ (Chong Kim Hoe) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

அந்த விபத்தில் போது, டான் டோக் செங் மருத்துவமனைக்கு, ​​41 மற்றும் 50 வயதுடைய இரண்டு பாதசாரிகள் மயக்க நிலையில் கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அந்த விபத்தில் ஏற்பட்ட கடுமையான காயங்களின் காரணமாக அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

மேலும், 37 முதல் 56 வயதுடைய மற்ற நான்கு பாதசாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவு அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட ஆறு பேரும் சிங்கப்பூரில் பணியாற்றிக்கொண்டு இருந்த வெளிநாட்டுப் பணிப்பெண்கள் ஆவார்கள்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், Grab உடன் ஒரு தனியார் வாடகை வாகன ஓட்டுநராக பணியாற்றி கொண்டிருந்தார். ஆனால், விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும்போது Grab அவரை இடைநீக்கம் செய்ததாக அச்சமயத்தில் கூறியது.

சோங் தற்போது ஜாமீனில் வெளியே வந்து, செப்டம்பர் 25 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு ஆஜர் ஆவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், வாகனத்தை ஓட்டும் போது மரணத்தை ஏற்படுத்தியதற்காக அவருக்கு எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரட்டை கொலை செய்துவிட்டு வெளிநாடு தப்பிச்சென்ற பணிப்பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
 Facebook
 Twitter
 Telegram

Sharechat

Instagram