“காணாமல் போன 71 வயது நபர் கண்டுபிடிக்கப்பட்டார்”- சிங்கப்பூர் காவல்துறை தகவல்!

missing police looking
Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வரும் 71 வயதான சீக்கியரை நேற்று (28/07/2022) காலை 08.20 AM மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, ஆங் மோ கியோ அவெனியூ 5-ல் (Ang Mo Kio Ave 5) காணப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 1- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரௌபதை அம்மன் கொடியேற்றம்!

இவர் ‘2013 Aviation Run’ வார்த்தைகளுடன் கூடிய வெளிர் நீல வண்ண மேலாடை (Greyish Blue Colour Top) மற்றும் கருப்பு நிற ‘நியூ பேலன்ஸ்’ ஸ்போர்ட்ஸ் ஷூக்களுடன் சாம்பல் கலந்த நீல நிற ஷார்ட்ஸ் (Light Blue Colour Shorts) அணிந்திருந்துள்ளார். இவரை யாரேனும் பார்த்தால் உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவித்திருந்தது.

சிங்கப்பூருக்குப் புதிதாய் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எல்லாமே முதலாளிகள் செலவு!

இந்த நிலையில், காணாமல் போன நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிங்கப்பூர் காவல்துறை, அவரைக் கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது. இந்த தகவலை சிங்கப்பூர் காவல்துறை, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று (28/07/2022) இரவு 07.45 PM மணிக்கு பதிவிட்டுள்ளது.