’73 வயதான இந்தியரை காணவில்லை’- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ” 73 வயதான இந்திய முதியவரை நேற்று (05/07/2022) காலை 04.22 மணி முதல் காணவில்லை. கடைசியாக அவர் புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 2 (Butik Batok West Avenue 2) அருகே நீல நிற டி- சர்ட் மற்றும் கருப்பு ஷார்ட்ஸ் அணிந்து வெள்ளை நிற பேக்கை எடுத்துச் சென்றுள்ளார். இவரை யாராவது பார்த்தால் உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அதேபோல், 88 வயதான சீன முதியவரை ஜூலை 4- ஆம் தேதி அன்று இரவு 09.19 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, காதிப் எம்ஆர்டி ஸ்டேஷனில் (Khatib MRT Station) காணப்பட்டார். வெள்ளை சட்டை, சாம்பல் நிற தொப்பி மற்றும் நீளமான பேண்டை அணிந்திருந்தார்.

Photo: Singapore Police Force Official Twitter Page

இவரை யாரேனும் பார்த்தால் உடனடியாக 999 என்ற காவல்துறையின் தொலைபேசி எண்ணை அழைக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.