“73 வயதான இந்தோனேசிய நபரை காணவில்லை”- தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 73 வயது முதியவரைக் காணவில்லை. இவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் ஆவார்.

சுறுசுறுப்பான சுட்டிக் குழந்தையை வைத்துக்கொண்டு இப்படிதான் வேலையைத் திட்டமிட வேண்டும் ! – சிங்கப்பூரைச் சேர்ந்த தாயின் திட்டப்பணி

ஜூலை 29- ஆம் தேதி அன்று பிற்பகல் 02.46 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, லோர் 33 கெய்லாங் (Lor 33 Geylang) பகுதியில் காணப்பட்டுள்ளார்.

இந்தியாவின் FDI-யில் 27.01 சதவீத பங்களிப்போடு சிங்கப்பூர் முதலிடம் – அந்நிய முதலீட்டின் வளர்ச்சி

அவர் நீல நிற சட்டை (Blue Shirt) மற்றும் சாம்பல் நிற பேண்ட் (Grey Pants) அணிந்திருந்துள்ளார். இவரை யாராவது பார்த்தாலோ (அல்லது) இவரைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், காணாமல் போன முதியவரின் படத்தையும் பதிவிட்டுள்ளது காவல்துறை.