சிங்கப்பூரில் 75 சதவிகித தமிழர்கள் மாடா உழைக்கிறாங்க! மீதி உள்ள 25 சதவீதம் பேரின் நிலை என்ன? அவங்க லெவலே வேற!

Singapore's top business chamber has urged employers to retrench workers only as a last resort
(PHOTO: Reuters)

சிங்கப்பூரில் 25 சதவிகித்திற்கும் மேல் தமிழர்கள் வணிகர்களாகவும் அரசு அலுவலர்களாகவும் பணியில் உள்ளனர். அவர்கள் சமூக அமைப்பின் மேல்தட்டில் இருப்பதாகக் கருதப்படுக்கின்றார் .

அடகுக்கடை வைத்து, வியாபாரம் செய்யும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், உயர்ந்த  நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையான வணிகர்கள் தமிழ்நாட்டுடன் மற்ற இந்தியப் பகுதிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றார்கள்.

சில்லரை வியாபாரத்திலோ, ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்திலோ தமிழ் வணிகர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த நூறு ஆண்டுக்குள், சில்லரை வாணிபம் செய்யும் நடுத்தர வகுப்பினர்கள் தோன்றினர்.

பொது வாணிபச் சரக்குகள் குறிப்பாக நெய்ப்பொருள்கள் விற்பதில் ஈடுபட்டு இவர்கள் மூலம் சில்லரை வாணிபம் ஓர் சிறப்பு நிலையை அடைந்தது எனக் கூறலாம்.

பொதுவாக வட்டித் தொழிலாளர்கள் எல்லோருமே இந்தியர்களாக – குறிப்பாக நாட்டுக் கோட்டைச் செட்டியார்களாக இருந்தார்கள்.

வணிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், சிறு கடை வணிகர்களுக்கும், குறைந்த ஊதியத் தொழிலாளர்களுக்கும் இவர்கள் வட்டிக்குப் பணம் கடன் கொடுத்தனர்.

இரப்பர், தகரம் முதலிய ஏற்றுமதி வாணிபத்தில் இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு மிகுதியான பங்கு கிடையாது.

ஒரு சிலரைத் தவிர, பொதுவாக இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் தமிழ் வணிகர்கள் சீன வணிகர்களையே நம்பி வாழ்கின்றார்கள்.

இறக்குமதி, ஏற்றுமதி வாணிபம் வெறும் தரகுத் தொழிலாகச் செயல்பட்டு வருகின்றது. வழக்குரைஞர்களாகவும், மருத்துவர்களாகவும் பல தமிழர்கள் இருக்கின்றார்கள்.

குற்றச்சாட்டு வழக்குரைஞர்கள், எதிர்வாதி வழக்குரைஞர்கள், நீதிபதிகள் முதலியவர்கள் எல்லோரும் சில விசாரணைகள் நடக்கும்போது தமிழர்களாகவே இருக்கின்றார்கள்.

மற்ற தமிழர்கள், ஏறத்தாழ 75 விழுக்காடு தமிழர்கள், தொழிலாளிகளாகப் பணிபுரிகின்றார்கள்.

இவர்களில் நான்கில் மூன்று பங்கினர் அயல்நாடுகளில் பெரும்பான்மையோர் சிங்கப்பூரில் பிறந்தவர்கள் ஆவார்கள்.