“75 வயது சீன நபரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 75 வயது சீன நபரை, நவம்பர் 29- ஆம் தேதி அன்று மதியம் 01.00 மணி முதல் காணவில்லை. இந்த நபர் கடைசியாக, பிளாக் 221 அப்பர் பயா லேபார் சாலையில் (Blk 221 Upper Paya Lebar Road) காணப்பட்டுள்ளார். அப்போது, வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் கருப்பு நிற பேண்ட்டை அணிந்திருந்துள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிய நபர் – வீடியோவில் சிக்கினார்… ஏன் ஓடினார் ?

இவரைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ (அல்லது) இவரை யாரேனும் பார்த்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போனவரின் புகைப்படத்தையும் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.