லிட்டில் இந்தியாவில் உரிமம் இல்லாமல் பணம் அனுப்பிய குற்றத்தில் எட்டு பேர் கைது !

8 men arrested for send money without permit

லிட்டில் இந்தியாவில் உரிமம் இன்றி பணம் அனுப்பிய, 30 முதல் 54 வயதுக்குட்பட்ட எட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிமம் இன்றி பணம் அனுப்பும் வர்த்தக நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் போலிசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் $47,000 ரொக்கம், கைபேசிகள், பணம் அனுப்பிய பரிவர்த்தனைக்கான ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்ப விரும்புபவர்கள் உரிமம் பெற்ற பணம் அனுப்பும் முகவர்கள் அல்லது வங்கிகளை நாடுமாறு அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.

இதுபோன்று உரிமம் இல்லாமல் பண பரிவர்தனை நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பானது, மேலும் இந்த நடவடிக்கைகள் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க நிதி அனுப்புதல் போன்ற குற்றங்களில் சந்தேகிக்கப்படும், என்று போலீசார் கூறியுள்ளனர்.

இது போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு $100,000 வரை அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு அவர் தொடர்ந்து பணம் அனுப்பும் வர்த்தகம் செய்தால் அவர் அந்த வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தும் ஒவ்வொரு நாளுக்கும் தலா $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.