சிங்கப்பூர், 8 வயது சிறுவனின் 5,364 மீட்டர் எவரெஸ்ட் சுவாரஸ்ய பயணம் – தந்தையுடன் சேர்ந்து சாதனை!

8-year-old fulfils dream of reaching Everest base camp with dad after six months in gym

உடற்பயிற்சி நிலையத்தில் 6 மாதம் பயிற்சிக்கு பிறகு அப்பாவுடன் சேர்ந்து எவரெஸ்ட் பேஸ் முகாமை அடைய வேண்டும், என்ற கனவை 8 வயது சிறுவன் நிறைவேற்றியுள்ளான்.

உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் முகாமை, அதாவது சுமார் 5,364 மீட்டர் அடைந்து சிங்கப்பூர் Yio Chu Kang Primary பள்ளி மாணவன் இந்த சாதனை படைத்துள்ளான்.

சிறுவன் வயதை சேர்ந்த பெரும்பாலான குழந்தைகள் பள்ளி விடுமுறை நாட்களில் திரைப்படங்கள் பார்ப்பது, மாலில் ஷாப்பிங் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகையில், எட்டு வயது தர்ஷன் ராஜ் துரைராஜசிங்கம் மிக உயர்ந்த லட்சியத்தை அடைய தனது மனதை பக்குவப்படுத்தி வந்துள்ளான்.

அவனது பெற்றோர்கள் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தை பற்றி பேசிக்கொண்டிருந்ததால் தர்ஷனின் மனதில் அங்கு செல்லவேண்டும், என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்தது.

அவனது தந்தை திரு.துரைராஜசிங்கம் விஜயசிங்கம் (37) ஜிம் உரிமையாளரான இவர், தனது ஜிம் உறுப்பினர்களுடன் பயணத்தைத் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அதை அவர் மனைவியுடன் வீட்டில் திட்டங்களைப் பற்றி பேசியபோது, தன்னுடன் சேர விரும்பிகிறாயா? என்று தனக்கு அருகில் அமர்ந்திருந்த தர்ஷனிடம் கேட்டார்.

அதற்க்கு தர்ஷன் ஆர்வமாக இருப்பதாக பதிலளித்த போதிலும் தந்தை துரைராஜசிங்கம் முதலில் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை, அவனுடைய பதிலை அவர் அலட்சியமாக எடுத்துக்கொண்டார். இருப்பினும் அவன் அந்த பயணத்தை பற்றி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான்.

குழந்தைகளுக்கு மலை பயணம் கடினம் தான் ஆனால் சாத்தியமற்றது அல்ல.

தனது மகனின் விடாமுயற்சி மற்றும் உறுதியால் ஆச்சரியப்பட்ட திரு. துரைராஜசிங்கம், முதன்முறையாக எவரெஸ்ட் பேஸ் முகாமிற்கு தனது மகனுடன் செல்ல திட்டமிட்டார். இதனை தொடர்ந்து மற்ற குழந்தைகள் மலையேற்றத்தை மேற்கொண்ட ரிப்போர்ட்களை படித்தபின் தர்ஷனை தன்னுடன் அழைத்து செல்வதை பற்றி தீவிரமாக யோசிக்க தொடங்கினார்.

அவரது மனைவியின் ஆதரவுடன் திரு. துரைராஜசிங்கம் தனது மகனுக்கு கடுமையான பயிற்சி முறையை மேற்கொண்டார். தன் மகன் பயணத்தில் எங்களுடன் சேர விரும்பினால், அதற்கு அவன் பயிற்சிக்கு உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறினார்.

ஆறு மாதங்களுக்கு தர்ஷன் ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் வரை வாரத்தில் மூன்று முறை ஜிம்மில் பயிற்சி பெறத் தொடங்கினார். டிரெட்மில்லில் ஓடுவது, ஸ்கிப்பிங் மற்றும் குதித்தல் ஆகியவை இதில் அடங்கும். இதுமட்டுமின்றி தந்தையும் மகனும் 50 கிலோமீட்டருக்கு வாரத்திற்கு இரண்டு முறை சைக்கிள் ஓட்டத் தொடங்கினர்.

கடுமையான பயிற்சி இருந்தபோதிலும், தர்ஷன் குறைவாகவே மதிப்பிடப்பட்டார்.

அவர் தினமும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து இன்று ஏதாவது பயிற்சி இருக்கிறதா? என்று கேட்பார். மேலும், அவர் பயணத்தைப் பற்றி பல கேள்விகளைக் கேட்டுகொண்டே இருப்பார், என்று தாயார் செல்வி கவிதா முத்துசாமி கூறினார்.

திரு துரைராஜசிங்கம் இறுதியாக தர்ஷன் இந்த பயணத்தில் சேர உறுதியாகிவிட்டதை உணர்ந்தார். நேபாலுக்கு டிக்கெட்டை பதிவு செய்து இருவரும் புறப்பட தயராக இருந்தனர்.

பயணத்தின் போது கடுமையான வெப்பநிலை நிலவியதன் காரணத்தால் தர்ஷனின் நிலையை நினைத்து துரைராஜ் கவலையுடன் இருந்தார். ஆனால், தர்ஷன் சற்றும் சோர்வின்றி பயணத்தை மேற்கொண்டான்.

தர்ஷனின் ஒன்பதாவது பிறந்தநாளுக்கு சில
நாட்கள் குறைவாக இருந்த நிலையில், ஜூன் 14 மதியம் தனது மகனுடன் பேஸ் முகாமிற்கு வெற்றிகரமாக வந்து சேர்ந்து பெருமகிழ்ச்சி அடைந்தார்.

இந்த மலையேற்ற பயணம் திரு துரைராஜசிங்கத்திற்கு தனது மகனைப் பற்றி அறிய ஒரு வாய்ப்பாக அமைந்தது.

தங்கள் குழந்தைகளுடன் மலையேற விரும்பும் பிற பெற்றோருக்கு திரு. துரைராஜசிங்கம் சில அறிவுரைகளை கூறினார்; “முதலில் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை கவனியுங்கள், அவர்களின் திறன்களுக்கு அப்பாற்பட்ட எதையும் செய்ய அவர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.

தந்தையின் மெய்சிலிர்க்கும் பணி அனைவரும் வெகுவாக கவர்ந்து வருகின்றது.