சிங்கப்பூரில் 95- ஆக்டேன் பெட்ரோல் விலை உயர்வு!

Photo: Google Maps

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் தங்கம், கச்சா எண்ணெய், சமையலுக்கு பயன்படுத்தப்படும் சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சர்வதேச பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

அட நம்ம ஊரு வங்கிகள் சிங்கப்பூரிலும் இருக்கா..? அவை என்னென்ன..? ஒரு லிஸ்ட்டே இருக்கு! – Indian banks in Singapore

குறிப்பாக, சிங்கப்பூரில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் மார்ச் 7- ஆம் தேதி நிலவரப்படி, 95 மற்றும் 98 ஆக்டேன் எரிபொருளின் விலைகளை லிட்டருக்கு 0.21 சிங்கப்பூர் டாலர் வரை உயர்த்தியது ஷெல் நிறுவனம் (Shell). இதனால் சிங்கப்பூரில் 95 ஆக்டேன் பெட்ரோல் விலை லிட்டர் 3 சிங்கப்பூர் டாலரைக் கடந்துள்ளது.

ஷெல் நிறுவனத்தின் 95 ஆக்டேன் (95 Octane) பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3.06 சிங்கப்பூர் டாலராக நிர்ணயித்துள்ளது. அதேபோல், கால்டெக்ஸ் (Caltex) நிறுவனத்தின் 95 ஆக்டேன் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2.98 சிங்கப்பூர் டாலராகவும், எஸ்ஸோ (Esso) நிறுவனத்தின் 95 ஆக்டேன் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2.95 சிங்கப்பூர் டாலராகவும் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து செல்லும் பயணிகளுக்கு தனிமை இல்லை – அறிவித்த நாடு!

அதேபோல், 98 ஆக்டேன் வகை பெட்ரோலின் விலையும், டீசலின் விலையும் உயர்ந்துள்ளதால், மற்ற பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude Oil) விலை மார்ச் 7- ஆம் தேதி நிலவரப்படி, ஒரு பீப்பாய் 139.13 அமெரிக்க டாலர்களை எட்டியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது குறுகிய காலத்தில் ஒரு பீப்பாய் விலை 150 அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.