இயல்பு நிலைக்கு திரும்பும் சிங்கப்பூர் – covid-19 கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

Diners to remove masks only while eating or drinking: MOH
Diners to remove masks only while eating or drinking: MOH (Photo: Mothership)

சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (April 26) மீதமுள்ள பெரும்பாலான Covid-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.கட்டுப்பாடுகளின் பெரிய மாற்றங்களில் குழு அளவுகளில் இனி வரம்புகள் கிடையாது. மேலும் தனி நபர்கள் இடையே சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து ஊழியர்களும் அவர்களது அலுவலகங்களுக்கு மீண்டும் திரும்பலாம்.

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் Covid-19 கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியதால் உணவகங்கள் ,விளையாட்டு மைதானங்கள், கருத்தரங்குகள்,வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற அனைத்து அமைப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் பெரும்பாலான அலுவலக கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் நுழைவதற்கான நீண்ட வரிசைகள் காணாமல் போனது. எனவே, மத்திய வணிக மாவட்டம் போன்ற பகுதிகளில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இருப்பினும் திரையரங்குகள்,வணிக வளாகங்கள் மற்றும் உணவு விடுதிகள் போன்ற உள்ளக அமைப்புகளில் முக கவசம் அணிய வேண்டும். உணவு உண்ணுதல் மற்றும் தண்ணீர் குடித்தல் போன்ற நிகழ்வுகளின் போது மட்டுமே முகக் கவசத்தை அகற்ற வேண்டும்.

கச்சேரி நிகழ்வுகள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் எந்த ஒரு பொது சபையாக இருந்தாலும், கூட்டங்களில் கலந்து கொள்ளும் 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் அடங்கிய அனைத்து நிகழ்வுகளுக்கும் தடுப்புசி வேறுபட்ட பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் தேவைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.