வெறும் $150க்கு வங்கிக் கிளைகளை திறக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராம் சர்மா – சிங்கப்பூர் ஸ்டார்ட்அப் வங்கிகள்

banking services atm Bank Genie

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வங்கியாளர் ஒருவர் வெறும் $150 டாலர்களுக்கு வங்கிக் கிளைகளை அமைக்க உதவினார்.வங்கிச்சேவை இல்லாதவர்களுக்கும் வங்கிச் சேவையை அணுக வசதியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வாழ்நாள் சேமிப்பை முழுவதுமாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் செலுத்தி தொலைதூரப் பகுதிகளில் வங்கிகள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

வங்கித் துறையில் அனுபவம் நிறைந்த ராம் சர்மா இந்தியாவில் உள்ள Centurion வங்கி மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள Albilad வங்கியிலும் பணியாற்றியவர்.இவர் சிங்கப்பூரில் நிரந்தர குடியிருப்பாளர் ஆவார். வங்கியாளர் ராம் ஷர்மா மற்றும் அவரது நண்பர் ரகுநந்தன் ஆகியோர் இணைந்து 2016ஆம் ஆண்டு ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிறுவினர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் அவர் மேற்கொண்ட ஒப்பீட்டளவில் அவரது மனதில் ஆழமாக இந்தத் திட்டம் நிலைத்தது. இருவரும் ATM- ஐ கண்டுபிடிக்க ஏறக்குறைய 100 கிலோமீட்டர் பயணம் செய்வதைக் கண்டுபிடித்தனர். எனவே, ஏடிஎம் வசதிகளை வழங்குவதற்காக நிறுவனத்திற்கு நிதி அளிக்க ஒரு மில்லியன் டாலர்களுக்கும் மேல் நிதி திரட்டும் பொருட்டு அவர் தனது முழு சேமிப்பையும் செலுத்தி மற்ற அனைத்தையும் அடமானம் வைத்தார்.

“ஒரு tablet , small Bluetooth printer மற்றும் card reader”, மூலம் வங்கிக் கிளைகளை திறக்கவும் ,நிதி சேவைகளின் தொகுப்பை வழங்கவும் Bank Genie உதவுகிறது. வேறு எதுவும் தேவையில்லை, ஒரு வங்கிக் கிளையை தொடங்குவதற்கு $150 மட்டுமே செலவாகும் என்று பேட்டியின்போது ஷர்மா கேலி செய்தார்

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட. ஸ்டார்ட் அப் நிறுவனம் மார்ச் 2022-ல் முடிவடையும் நிதியாண்டில் 3.1 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் ஒவ்வொரு வங்கியை கொண்டு வருவது எங்கள் நோக்கமாகும் என்று சர்மா பேட்டியில் தெரிவித்தார்.