சிங்கப்பூரின் தெருக்களில் உலவிக் கொண்டிருக்கும் விசித்திரமான பையை அணிந்த நபர் – ஆப்பிள் நிறுவனத்தின் திட்டம் கூகுள் மேப்பை பின்னுக்கு தள்ளுமா?

apple mapping survey

சிங்கப்பூரின் Yishun மற்றும் 6 வது அவென்யூ பகுதியில் விசித்திரமான பையை அணிந்தவாறு நபரொருவர் தெருக்களில் வலம் வருவதை பெரும்பான்மையான மக்கள் கண்டுள்ளனர். அந்த தோளில் அணிந்திருந்த பையை கண்ட சிங்கப்பூரர்கள் குழப்பமடைந்திருப்பர்.சிங்கப்பூரின் தெருக்களில் உள்ள விவரங்கள் அந்த நபர் ஆப்பிள் நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்டவர் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? இல்லை எனினும் அதுதான் உண்மை.

சிங்கப்பூர் பயனர்களுக்கு ஏப்ரல் 21 அன்று Apple Maps செயலியில் மேம்பாடுகளை அறிவித்தது. அதன் உலவுதல் (Navigation) அமைப்பை மேம்படுத்தவும் ,சிங்கப்பூரில் உள்ள கட்டிடங்கள், தெருக்கள் மற்றும் சாலைகள் பற்றிய விளக்கமான படங்களை பயனர்களுக்கு வழங்கவும் ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற தரைவழி ஆய்வுகள் மூலம் தரவுகளை சேகரித்து வருகிறது.

இந்த தரவு சேகரிப்பு பாதசாரி ஒருவர் பையை அணிந்துகொண்டு உலா வருவதன் மூலம் நடைபெறுகிறது. மேலும் அதேவேளையில் வாகனம் மூலமும் இதுபோன்ற தரவு சேகரிப்பு நடத்தப்படுகிறது.மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் ,ஜனவரி 1, 2022 முதல் புதிய அப்டேட்டிற்க்காக சிங்கப்பூரை முழுவதுமாக மேப்பிங் செய்துவருகிறது.

உயர்தர மற்றும் புதுப்பிக்கப்பட்ட சில இடங்கள் மற்றும் கட்டிடங்களை வரைபடத்தில் அப்டேட் செய்வதற்கு அவ்வப்போது மறுபரிசீலனை செய்து தரவுகளை மீண்டும் சேகரிக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

Apple-ன் IOS 15 உடன் , பயனர்கள் தங்களைச் சுற்றியுள்ள கட்டிடங்களை ஸ்கேன் செய்து ,உலகின் உண்மையான சூழலில் பார்க்கக்கூடிய விரிவான திசைகளை வழங்குவதற்கான மிகவும் துல்லியமான நிலையை உருவாக்க முடியும் என்ற ஆப்பிள் தெரிவித்தது