‘இந்தியாவுக்கு மீண்டும் A380 ரக விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: Wikipedia

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு மீண்டும் A380 ரக விமான சேவைகளை இயக்கவிருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் மார்ச் 14- ஆம் தேதி முதல் மும்பை, சிங்கப்பூர் இடையே A380 ரக விமானங்கள் இயக்கப்படும். இது தினசரி விமான சேவை ஆகும். அதைத் தொடர்ந்து, வரும் மாதங்களில் டெல்லி , சிங்கப்பூர் இடையே A380 ரக விமான சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ART கருவிகளின் தேவை அதிகரிப்பு – உள்ளூரிலேயே தயாரிக்க நிறுவனங்கள் விண்ணப்பம்!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் A380 ரக விமானத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

‘A380’ ரக விமானம் இரண்டு அடுக்குகளைக் கொண்டது. இந்த விமானத்தில் நான்கு பிரிவுகளில் மொத்தம் 471 இருக்கைகள் உள்ளது. விமானத்தில் மேல் தளத்தில் (Upper Deck) முதல் பிரிவில் ஆறு அறைகளும், ‘பிசினஸ்’ வகுப்பில் 78 இருக்கைகளும் (Business Class) உள்ளன. விமானத்தின் கீழ் தளத்தில் (Main Deck) 343 ‘எகானாமி’ இருக்கைகளும் (Economy Class), 44 ‘பிரிமியம் எகானாமி’ இருக்கைகளும் (Premium Economy Class) உள்ளன.

பொதுவாக, தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்த விமான சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. சராசரி விமான பயணக் கட்டணத்தை ஒப்பிடும் போது, இந்த வகை விமான பயணக் கட்டணம் பல மடங்கு அதிகம் ஆகும்.

இந்த விமானத்தில் தொழில்நுட்ப வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் இருக்கும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மொத்தம் 12 ‘A380’ விமானங்களை வைத்திருக்கிறது.

புதிய பேருந்து நிறுத்தங்கள் தொடர்பான எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் அறிவிப்பு!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான ஸ்கூட் நிறுவனம், இந்தியாவின் திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து VTL, Non-VTL விமான சேவையை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.