‘கலாம் ஐயாவின் பெரும் புகழுக்கு காரணம் அறிவியல் சாதனையே! மனிதாபிமானப் பண்பே!’- சிறப்பு பட்டிமன்றம்!

'கலாம் ஐயாவின் பெரும் புகழுக்கு காரணம் அறிவியல் சாதனையே! மனிதாபிமானப் பண்பே!'- சிறப்பு பட்டிமன்றம்!
Photo: LISHA

 

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானியுமான மறைந்த டாக்டர் அப்துல் கலாம் ஐயாவின் 92வது பிறந்தநாளையொட்டி, சிங்கப்பூர் தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம் சார்பில், வரும் அக்டோபர் 15- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 06.00 மணிக்கு சிங்கப்பூரில் உள்ள உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கலாம் ஐயாவின் பெரும் புகழுக்கு காரணம் அறிவியல் சாதனையே! மனிதாபிமானப் பண்பே! என்ற தலைப்பில் பட்டிமன்ற நடுவராக நகைச்சுவை நாவலர் தமிழ்ச்செம்மல் புலவர் சண்முகவடிவேல் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

திருமண விருந்தை உட்கொண்ட 30 பேருக்கு உடல்நிலை பாதிப்பு

இந்த சிறப்பு பட்டிமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சித்துறை துணை அமைச்சர் முஹம்மாட் ஃபைஷால் இப்ராஹிம் கலந்து கொள்கிறார். இந்த சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளவிருப்பவர்கள், வரும் அக்டோபர் 10- ஆம் தேதிக்குள் முன்பதிவுச் செய்துக் கொள்ளுமாறு தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.