எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்! – உலகம் முழுக்க சுற்றிப்பார்த்த நபர்! சக்திவாய்ந்த பாஸ்போர்ட் இருந்தால் போதும்!

sg passport world trip
26 வயதான பசந்த் சதாசிவன் என்ற நபர் உலகின் மிக சக்தி வாய்ந்த சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு உலக நாடுகளையெல்லாம் வலம் வந்துள்ளார்.ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளான 195 தேசத்தையும் சுற்றியிருக்கிறார்.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் மிக சக்திவாய்ந்தது என்று வெளியான செய்தியைப் படித்தபோது,​​2017 ஆம் ஆண்டில் இந்த நாடுகள் மற்றும் அங்குள்ள பிரபல பகுதிகளுக்குச் செல்ல சதாசிவன் முடிவு செய்துள்ளார்.அவர் குடும்பத்துடன் சிறுவயதில் முதலில் சென்ற நாடு மலேசியா.

அவரது குடும்பம் பயணம் செய்வதை விரும்புவதால் அவர்களுடன் இத்தாலி, கிரீஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு பயணம் செய்ததாகக் கூறினார்.
அவரது 12 வயதில் பெரியவர்கள் துணையின்றி தனியாக தனது அத்தையைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.அந்தப் பயணம் அவர் மனதில் தைரியத்தை உண்டாக்கியது.வர் தனது பெற்றோர் இல்லாமல் தனியாக பயணங்களைத் தொடங்க இது அடித்தளமானது.
படிப்பையும் பயணத்தையும் சமநிலையில் மிகச்சிறப்பாக கையாண்டார்.உலக நாடுகள் அனைத்தையும் சுற்றிப்பார்க்க சக்திவாய்ந்த பாஸ்போர்ட் மட்டும் போதுமா என்ன? அதிகமான பணமும் தேவைப்படும்.படித்துக்கொண்டே பகுதிநேரமாக கால்பந்து பயிற்சியாளராக பணிபுரிந்த இவர் விடுமுறைக்காலங்களில் முழுநேரமாக பணிபுரிந்து பணத்தை சேமித்தார்.

உலகம் முழுக்கச் சுற்றிப்பார்க்க ஆசை இருக்கும் அனைவரும் விடாமுயற்சியுடன் உழைத்து பணத்தை சேமித்தால் கனவு நினைவாகும் தருணம் வெகு தொலைவில் இல்லை .