அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்… கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று பகுதியில் நேற்று முன்தினம் (17/01/2022) காலை சரியாக 10.00 மணியளவில் திடீரென ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் விமான நிலையம் அருகே உள்ள முசாஃபா பகுதியில் எண்ணெய் நிறுவன கிடங்கில் மூன்று டேங்கர் லாரிகள் தீப்பற்றி வெடித்து சிதறின. இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் கூறுகின்றன.

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு பால் குடம் சுமந்து வந்த சிங்கப்பூர் துணை பிரதமர்!

இந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் தாக்குதலால் அபுதாபி மக்களிடையே மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனிடையே, அபுதாபியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

“அனைத்து பக்தர்களுக்கும் தைப்பூச வாழ்த்துகள்”- சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ட்வீட்!

அந்த வகையில், சிங்கப்பூர் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததற்கு சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை மற்றும் நியாயப்படுத்த முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.