மீடியாகார்ப் கட்டிடத்தின் மீது கார் மோதி விபத்து – ஓட்டுனருக்கு காயம்

accident
Photo: William Ye

மீடியாகார்ப் வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் மீது இன்று (ஜன. 13) அதிகாலை கார் மோதியதில் 62 வயது ஆடவருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன.

இன்று நள்ளிரவு 1.10 மணியளவில் ஸ்டார்ஸ் அவென்யூவில் கார் விபத்துக்குள்ளானது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள்… வெளிநாட்டவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த நபர் காரை ஓட்டிச் சென்றவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மருத்துவ உதவியாளர்கள் அவரை பரிசோதித்ததாகவும், பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

விடுதியில் தகராறு: இறந்த தன் தாயை அவமானப்படுத்திய வெளிநாட்டு ஊழியரை குழவி கல்லால் தாக்கிய சக ஊழியருக்கு சிறை