பேருந்து நிறுத்தத்தின்மீது சொகுசு கார் மோதி விபத்து – கடைசியில் நடந்த ட்விஸ்ட்

accident-bus-stop-driver-disappear
Shin Min Daily News

Clemenceau அவென்யூ பேருந்து நிறுத்தத்தின்மீது கடந்த நவ.24 ஆம் தேதி அன்று காலை 6 மணியளவில் சொகுசு கார் ஒன்று மோதியது.

அந்த வழியாக சென்ற ஒருவர் விபத்து குறித்து ஷின் மின் டெய்லி நியூஸுக்கு தகவல் கொடுத்தார். விபத்தின் தாக்கம் மிக கடுமையாக இருந்ததால், அங்கு அதிக சேதம் ஏற்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்கள் உஷார்: பாதுகாப்புடன் இருங்கள்… குறிப்பாக work permit ஊழியர்கள்

காரின் அடியில் சாலை தடுப்பு இரும்பு கம்பி ஒன்று உடைந்து சொருகி இருப்பதையும் நம்மால் காண முடிகிறது.

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், விபத்து நடந்த இடத்தில் போலீசார் வந்து பார்த்தபோது கார் ஓட்டுநரை காணவில்லை.

விபத்துக்கு பின் காணாமல் போன அந்த ஓட்டுனரை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலையில் இருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு – ஊழியர்களின் வயது 35க்கும் குறைவு என்பது அதிர்ச்சி தகவல்