அடுத்தடுத்த பணியிட விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளிகள் – சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் நிறுவனங்களுக்கு ஆலோசனை

retrenchments-2024-increase-ntuc-measures

சிங்கப்பூரில் 49 வயதான உள்ளூர் தொழிலாளி கட்டிடத்தின் மேற்கூரையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது 9.5 மீ உயரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்ததால் மரணம் அடைந்தார். இவர் ஒரு ஃப்ரீலான்ஸ் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலே இருந்து விழுந்த தொழிலாளியை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.

எரிவாயு மற்றும் எண்ணெய் ஆய்வு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு நிறுவனமான வினா ஸ்பெஷலிஸ்ட் பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் Ng Teng Fong ஃபிரீலன்ஸ் தொழிலாளியாக வேலைக்கு சேர்த்துள்ளது. இவரது மரணத்தைச் சேர்த்து 24 பணியிட இறப்புகள் பதிவாகியுள்ளன.

Covid-19 வைரஸ் தொற்றின் சர்வதேச பரவல் காரணமாக ,பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை மற்றும் திட்டமிட்டபடி பணியை முடிக்க அவசரம் போன்றவை தொடர்ந்து தொழிலாளிகளை பாதிக்கின்றன.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு வினா ஸ்பெஷலிஸ்ட்டுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் உயரத்திலிருந்து தொழிலாளி கீழே விழுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கண்டறிந்து அவற்றைப் பாதுகாப்பாக மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்து அடுத்து மே 26 ஆம் தேதி அன்று காஜிமா ஓவர்சீஸ் ஆசியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆபத்தான பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிகள் முறையாக திட்டமிடப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியது.