15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றம் சாட்டப்பட்டவர் சிங்கப்பூரிலிருந்து தப்ப முயற்சி – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

(Photo: TODAY)

சிங்கப்பூரில் கடந்த 2017ஆம் ஆண்டு பாசிர் ரிஸ் ஸ்திரீட் 51 உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில், 15 வயது சிறுமியைப் இரு ஆடவர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினர்.

சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் அச்சிறுமியின் அழு குரலைக் கேட்டு அங்கு விரைந்தனர். பின்னர், நடந்ததைப் பற்றி அச்சிறுமி அதிகாரிகளிடம் கூறியதை அடுத்து அந்த இரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்ட இரு ஆடவர்களில் ஒருவர், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் செல்லாமல் சிங்கப்பூரிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார். சிங்கப்பூரில் இருந்து தம்மைத் தப்பிக்க வைக்கக்கூடிய ஒருவரைத் தேடி அந்த ஆடவர் புலாவ் உபின் தீவுக்குச் சென்றார்.

விமான விபத்து: சீன அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

புலாவ் உபின் தீவில் இருந்து மலேசியாவுக்குச் செல்ல தமக்கு உதவக்கூடிய எவரையும் அவர் கண்டுபிடிக்க முடியாததால் சிங்கப்பூருக்கு அவர் மீண்டும் திரும்பினார். இதையடுத்து, மறுநாள் பென்கூலன் வட்டாரத்தில் உள்ள ஹோட்டல் அருகில் அவர் கைது செய்யப்பட்டார்.

15 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாகத் தாக்கிய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்திற்காக அந்த 22 வயது ஆடவருக்கு நேற்று (மார்ச் 21) 9 ஆண்டு சிறைத்தண்டனையும், 6 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய மற்றோர் ஆடவருக்கு 8 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக ஊழியர் மீது மனைவி கொடுத்த புகார் – கைது செய்த போலீஸ்!