பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்…. மனோபாலாவின் திரைப்பயணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Photo: Manobala Official Twitter Page

தமிழ் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவுக் காரணமாக, மே 03- ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மே 5- ஆம் தேதி அன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி பூஜை!

நடிகர் மனோபாலாவின் திரைப்பயணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

நடிகர் கமல்ஹாசன் மூலம் கடந்த 1979- ஆம் ஆண்டு ‘புதியவார்ப்புகள்’ படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார் மனோபாலா. பிள்ளை நிலா, விஜயகாந்தின் சிறைப்பறவை, ரஜினியின் ஊர்க்காவலன் உள்ளிட்ட 20 படங்களை இயக்கியுள்ளார். பன்முகத்திறன் கொண்ட மனோபாலா நகைச்சுவை உள்ளிட்ட வேடங்களில் சுமார் 175 படங்களில் நடித்துள்ளார்.

ஊழியரின் iPhone -ஐ ஆட்டையை போட்ட டெலிவரி ஓட்டுனர்.. “தகவல் தெரிந்தால் சொல்லுங்க” – கோரிக்கை வைக்கும் ஊழியர்

பிதாமகன், காக்கிசட்டை, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய படத்தில் மனோபாலாவின் காமெடிகள் பிரபலமானது. பேரழகன், யாரடி நீ மோகினி, அந்நியன், கலகலப்பு, அரண்மனை உள்ளிட்ட படங்களிலும் மனோபாலா நடித்துள்ளார். சில தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியதுடன் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
பஞ்சவர்ணம், புன்னகை மன்னன், 777 உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார். சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை- 2 படங்களைத் தயாரித்தவர் மனோபாலா.

அஞ்சலிக்கு பிறகு மனோபாலாவின் உடல் மே 4- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.