அடேங்கப்பா! இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே! – செயற்கை கொசுக்கள் மூலம் ADES கொசுக்களை கட்டுபடுத்த சிங்கப்பூர் அரசின் திட்டம்

Dengue cases expected to exceed 16,000 cases unless immediate action taken: NEA
Dengue cases expected to exceed 16,000 cases unless immediate action taken: NEA

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொசுக்களின் எண்ணிக்கையால் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவுகிறது.நடப்பு ஆண்டில் மட்டும் 1400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டன.

கடந்த மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்த்தது.டெங்கு பரவக்கூடிய காலநிலையான ஜூன் தொடங்குவதற்கு முன்னதாகவே டெங்கு பாதிப்புகள் சிங்கப்பூரில் அதிகரித்து காணப்படுகிறது.இது சிங்கப்பூர் அரசாங்கத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

டெங்கு பாதிப்புகளை ADES என்ற வகைக் கொசுக்களேஏற்படுத்துகிறது.இந்த வகைக் கொசுக்களை அழிக்க சிங்கப்பூர் அரசு ஒல்பேச்சியா என்ற திட்ட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பல லட்சம் கொசுக்களை உற்பத்தி செய்து அந்த கொசுக்கள் மூலம் ADES கொசுக்களை அழிக்கலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் Grace Fu கூறினார்.ஆரம்பத்தில் ஒவ்வொரு வாரமும் 20 லட்சம் கொசுக்கள் உற்பத்தி செய்யப்படும்.அதன் பின்னர் வாரத்திற்கு 50 லட்சம் ADES கொசுக்கள் என இந்த உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

உற்பத்தி செய்யப்பட்ட கொசுக்களிடம் ஒல்பேச்சியா என்ற பாக்டீரியா காணப்படும்.இந்த பாக்டீரியாவை சுமந்து செல்லும் கொசுக்கள் நகர்ப்புறங்களில் உள்ள பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும் போது ,அவற்றின் முட்டைகள் குஞ்சு பொறிக்காது.இதனால் மேலும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடியும்.

டெங்குவை கட்டுப்படுத்த ,கொசுக்களை அளிக்க வேண்டும்.இயற்கையாக உருவான இந்த கொசுக்களை அழிக்க ,இந்த சிறப்பு கொசுக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் என அமைச்சர் கூறினார்.