கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகமாக பதிவாகியுள்ள டெங்கு வழக்குகள் – சிங்கப்பூரில் கொசுக்களின் உற்பத்தியை கட்டுபடுத்த அமைச்சர் Grace Fu வலியுறுத்தல்

aedes mosquitos multiples cause to dengue fever in singapore

சிங்கப்பூரில் covid-19 தொற்று வழக்குகள் ஒருபுறம் பதிவாகிக் கொண்டிருக்கும் வேளையில் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 5,500 டெங்கு வழக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சல் வழக்குகளின் எண்ணிக்கை உச்சத்தில் இருப்பதால் எதிர்வரும் மாதங்களில் டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கவலையளிப்பதாக ஞாயிற்றுக்கிழமை (April 24) சுற்றுச்சூழல் அமைச்சர் Grace Fu தெரிவித்தார்.

கொசுக்களின் உற்பத்தியை தடுக்க அவசரக்கூட்ட நடவடிக்கையை எடுக்குமாறு Fu வலியுறுத்தினார். சிங்கப்பூர் பொது சுகாதார கவுன்சிலின் “தூய்மையாக இருங்கள் ” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய போது அமைச்சர் Fu கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

“Covid-19 வைரஸ் தொற்றின் நிலைமையிலிருந்து படிப்படியாக மீண்டு வந்து முன்னேற்றங்களை கண்டாலும் ,டெங்கு நோயிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் டெங்கு ஒரு கடுமையான சுகாதார அச்சுறுத்தலாகும் ” என்று அமைச்சர் கூறினார்.

டெங்கு நோய்களின் அதிகரிப்பிற்கு பல்வேறு காரணிகள் காரணங்களாக அமைகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொசுக்களின் உற்பத்தி அதிகரிப்பு மிகவும் குறிப்பிடத்தக்க காரணியாகும். 2021 ஆம் ஆண்டு Aedes aegypti கொசுக்களின் எண்ணிக்கையைவிட தற்போதைய கொசுக்களின் எண்ணிக்கை 48% அதிகமாக உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. எனவே சிங்கப்பூர் மக்கள் கொசுக்களிடம் இருந்து விலகி இருப்பது உடல் நலத்திற்கு சிறந்தது.