‘டக் டக்’ ஆப்பிரிக்கப் பென்குயின்களின் சிங்கார அணிவகுப்பைக் காணலாமா! – சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் கண்காட்சிக்கு ஆன்லைனில் முன்பதிவு!

penguin-parade; pc- mothership.sg
கருப்பு-வெள்ளை உடை அணிந்து கொண்டு வழக்கறிஞர் போலத் தோற்றமளிக்கும் பென்குயின்களின் நடையைப் பார்த்தாலே குழந்தை முதல் பெரியவர் அனைவரும் சிரித்து மகிழ்வர்.அத்தகைய அழகு பென்குயின்கள் ஒன்றல்ல இரண்டல்ல,ஏராளமாய் சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலையில் உள்ளன.
சிங்கப்பூருக்கு வந்துள்ள ஆப்பிரிக்க பென்குயின் கூட்டத்தை பார்வையாளர்கள் நெருக்கமாகப் பார்க்கலாம்.நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்பென்குயின் கூட்டங்களை சுற்றி வளைக்கப்பட்ட பகுதியில் பார்வையாளர்கள் அருகிலிருந்து பார்வையிடலாம்.
சிங்கப்பூர் மிருகக் காட்சி சாலையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.கண்காட்சிக்கு வருவதற்கு முன்பு பென்குயின்கள் சிறிது நேரம் புல்வெளிகளில் சுற்றித் திரிந்து கொண்டு ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க காவலர்கள் அங்கு நிருத்தப்பட்டிருப்பார்கள்.
கண்காட்சிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம்.ஆப்பிரிக்க பென்குயின்களுடன் நெருக்கமாக உலவ விருப்பம் உள்ளவர்கள் கூடுதலாக ஒரு நபருக்கு S$8 கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.எப்போது வேண்டுமானாலும் கண்காட்சியைக் காண முடியுமா என்பது சந்தேகம்தான்.
மோசமான வானிலை காரணமாக செயல்பாடு நிறுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.மாண்டாய் வனவிலங்கு குழுவின் பிற ஆண்டு இறுதி செயல்பாடுகளை இங்கே காணலாம்.
பென்குயின்களின் அணிவகுப்பைக் காண விரும்பும் அனைவரும் அது குறித்த விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள இயலும்.சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் நவம்பர் மாதம் 23, 24, 30 ஆகிய தேதிகளிலும்,டிசம்பர் மாதம் 1, 7, 8, 10, 14, 15, 17, 21, 22, 24, 28, 29, 31 போன்ற தேதிகளிலும் மாலை 5:30 – 6 மணி வரைப் பார்வையிடலாம்.