வாய்ப்பளித்த இந்திய ராணுவத்திற்கு நன்றி! – சிங்கப்பூர் பீரங்கிப் படைத் தலைமைத் தளபதி உரை!

Singapore Army

சிங்கப்பூர்-இந்திய ஆயுதப்படை ஒருங்கிணைந்து செய்த கூட்டுப்பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.இந்தியாவின் தேவ்லாலி பகுதியில் நடைபெற்ற ‘அக்னி வாரியர்’ ராணுவப் பயிற்சியில் சிங்கப்பூர் ராணுவமும் சேர்ந்து பயிற்சி பெற்றது.இருநாட்டுப் படைகளிலிருந்து சுமார் 270 பங்கேற்றனர்.

கடந்த நவம்பர் 13 முதல் 30 வரை பயிற்சி நடைபெற்றது.சிங்கப்பூரின் கள பீரங்கி வானிலை அமைப்பு,குறைந்த எடை கொண்ட ஹவிட்சர்,இந்தியப் படையின் 155 மி.மீ ஹவிட்சர் 77 பி ஆகியவை பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.இரு நாடுகளின் கூட்டுப்பயிற்சி நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சியுடன் முடிவடைந்தது.

பல ராணுவ உத்திகளை பகிர்ந்து கொள்வதற்கும்,இரு நாட்டுப் படைகளின் வீரர்கள் இணைந்து பயிற்சி செய்வதற்கும் அக்னி வாரியர் கூட்டுப்பயிற்சி வாய்ப்பளித்ததாக சிங்கப்பூர் பீரங்கிப்படைத் தளபதி கர்னல் தேவேஷ் ஜேம்ஸ் தெரிவித்தார்.

இத்தகைய வாய்ப்பளித்த இந்திய ராணுவத்திற்கு நன்றி என்று கூறினார்.இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின்படி 2004-ஆம் ஆண்டிலிருந்து அக்னிவாரியர் கூட்டுப்பயிற்சி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.