எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் 12வது மாடியில் வேலை பார்க்கும் ஊழியர்: “விழுந்தால் என்ன ஆவது”- நெட்டிசன்கள் கவலை

STEVEN DAVID/FACEBOOK

HDB அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் ஊழியர் ஒருவர் எந்த வித பாதுகாப்பு கவசமும் இல்லாமல் AC கம்ப்ரசரை பழுது பார்த்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவியதை அடுத்து அதனை கண்ட பேஸ்புக் பயனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாலத்தின்கீழ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் எலும்புக்கூடு: இறந்து 6-12 மாதம் இருக்கலாம் – யார் என்றே தெரியாத மர்மம்!

Singapore Home DIY என்ற Facebook குழுவில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 11) இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. அதில், 11 அல்லது 12 வது மாடியில் AC கம்ப்ரசர் மேல் ஊழியர் உட்கார்ந்திருப்பதை காணமுடிகிறது.

இது கவலை உண்டாக்குகிற ஒரு புகைப்படம் என்றும், ஏதேனும் விபரீதம் நடந்தால் அவரது வாழ்க்கை என்ன ஆவது என்றும் பேஸ்புக் பயனர்கள் கவலையுடன் தங்கள் கருத்துக்களை கூறினர்.

STEVEN DAVID/FACEBOOK

நேற்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், மனிதவள அமைச்சகத்தை இதுகுறித்து தொடர்பு கொண்ட போது அது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், பணியிட காயங்கள் மற்றும் உயரத்தில் இருந்து விழுவதால் ஏற்படும் இறப்புகள் பற்றிய புள்ளிவிவரங்களை அது வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் உயரத்திலிருந்து வீழ்ந்தது தொடர்பாக 35 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் பாலிடெக்னிக் பட்டதாரிகளுக்கு அதிகரிக்கும் வேலை..!