விமானத்தில் ரகளை செய்த பயணியை இறக்கிவிட்ட விமான நிறுவனம்!

Photo: Air India

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு (Air India) சொந்தமான ‘AI 111’ என்ற விமானம், தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (Indira Gandhi International Airport) இருந்து 225 பயணிகளுடன் புறப்பட்டு, லண்டனுக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, விமான பயணி ஒருவர், விமானத்தில் ரகளை செய்துள்ளார். விமான ஊழியர்கள் அவரை இருக்கையில் அமருமாறு அறிவுறுத்தினர். இதனை ஏற்றுக் கொள்ளாத அவர், விமான ஊழியர்கள் இரண்டு பேரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்திய ஆடவர் மரணம்… உயிரை வாங்கிய நபர் – என்ன நடந்தது?

இதையடுத்து, விமானி மீண்டும் இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கினார். அதைத் தொடர்ந்து, அந்த பயணி விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். விமான நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில், அந்த பயணி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கைப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

பின்னர், அந்த விமானம், மற்ற பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் விமானத்தில் இருந்த சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் சாங்கி ஏர்போர்ட் 9வது இடம் – முதல் இடம் எது தெரியுமா?

இதுப்போன்ற சம்பவங்கள் விமானத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வரும் நாட்களில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான பயணிகள் இந்திய விமான போக்குவரத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.