புதிதாக 1,000 விமானிகளை பணியமர்த்தவுள்ள ஏர் இந்தியா நிறுவனம்!

Photo: Air India

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 1,800- க்கும் மேற்பட்ட விமானிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், விமான போக்குவரத்து, நெட்வொர்க் அமைப்புகளை மிகப்பெரிய அளவில் விரிவுப்படுத்தத் திட்டமிட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து மிக அகலமான அமைப்பைக் கொண்ட 470 புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

மே 3- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

இந்த ஒப்பந்தங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னிலையில் கையெழுத்தானது. எனவே, புதிய விமானங்களை இயக்குவதற்கு விமானிகள், பயிற்சியாளர் என பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் தேவைப்படுகின்றனர். அந்த வகையில், 1,000- க்கும் மேற்பட்ட விமானிகளைப் பணியமர்த்தவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள புதிய விமானங்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், உலகின் மிகப்பெரிய விமான நிறுவனங்களின் பட்டியலில் ஏர் இந்தியா நிறுவனம் இணையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சிங்கப்பூரில் வெளியானது ‘பொன்னியின் செல்வன் 2’- திரையரங்குகளின் பட்டியல்!

ஏர் இந்தியா நிறுவனம், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.