சிங்கப்பூரில் சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையை எட்டிய காற்றின் தரம்!

Image Credits : AFP/Roslan Rahman

சிங்கப்பூரில், மாசுபாடு தரநிலைக் குறியீடு (PSI) 100 புள்ளியைத் தாண்டியதால் காற்றின் தரம் நேற்று (பிப். 27) ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

நேற்று இரவு 7 மணியளவில், சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் 24 மணி நேர PSI குறியீடு 100 புள்ளிகளை தாண்டி 102ஐ எட்டியது.

வாம்போவில் உள்ள பிளாட்டில் தீ விபத்து – 3 குழந்தைகளை உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மேலும் இரவு 9 மணிக்கு 104 ஆகவும், இரவு 10 மணிக்கு 90 ஆகவும் குறைவதற்கு முன்பு இரவு 8 மணிக்கு 108 என்ற உச்ச குறியீட்டை எட்டியது.

தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் (NEA) கூற்றுப்படி, 50 மற்றும் அதற்கும் குறைவான PSI குறியீடுகள் நல்ல காற்றின் தரத்தை குறிக்கும், 51-100க்கு இடையில் இருந்தால் மிதமானவை.

மேலும், 101-200க்கு இடையில் இருந்தால் காற்றின் தரம் ஆரோக்கியமற்றவை என்பதைக் குறிக்கின்றன.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிதாக ஒருவர் பாதிப்பு

நேற்று இரவு 10 மணி நிலவரப்படி :

  • தெற்கில் – 61
  • கிழக்கில் – 70
  • மேற்கில் – 58
  • மத்திய பகுதியில் – 65

COVID-19: வெளிநாட்டில் இருந்து சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்த ஆடவர் மரணம்