பாஸ்போர்ட் காட்டத்தேவையில்லை.. சிங்கப்பூரில் பதிவுசெய்த வெளிநாட்டினருக்கான முக்கிய அறிவிப்பு!

வெளிநாட்டினர் ஒவ்வொரு முறை சிங்கப்பூர் வரும் போதும், குடி­நு­ழைவு நுழை­வா­யில் வழி­யாக நேரடி அனு­மதி பெற­வேண்டும். அதற்கு பாஸ்போர்ட் காண்பித்து அனுமதி கிடைத்த பின்னரே மேற்கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இனி சிங்கப்பூரில் பதிவு செய்த வெளிநாட்டினருக்கு அந்த முறை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்த வெளிநாட்டினர் என்றால், ஒருவர் சிங்கப்பூருக்கு முதல் முறையாக வரும் போது, முக அடை­யா­ளத்­தை­யும் கரு­விழி அடை­யா­ளத்தையும் பதிவு செய்து கொள்வார்கள்.

அவை எப்போதும் சேமிக்கப்பட்டே இருக்கும். இந்த ஆண்டின் இரண்­டாம் பாதி­யில் மீண்­டும் சிங்கப்பூர் வரும் பயணிகள் தானி­யக்க குடி­நு­ழைவு அனு­ம­தியை பெறப்போகிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு  வருகிறது.

இனி அடுத்­த­டுத்த வரு­கைக்­கும் இந்த அனு­மதி அளிக்­கப்­படும் என்று குடி­நு­ழைவு சோதனைச் சாவடி ஆணை­யம் கூறி­யது.

இதற்கு முன்னார் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­யும் ஒவ்­வொரு முறை­யும் நேரடி அனு­மதி பெற­வேண்டி இருந்தது.

குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம் 2023 ஆம் ஆண்டு முதல் எல்­லாப் பய­ணி­க­ளை­யும் தானி­யக்க முறை­யில் அனு­ம­திப்­பது என இலக்கு வைத்துள்ளது.

இனி சிங்­கப்­பூ­ரை­விட்டு வெளி­யே­றும்­போ­தும், திரும்பி வரும்­போ­தும் குடி­நு­ழைவு அனு­மதி வாயி­லில் பாஸ்போர்ட்டை கொடுக்க வேண்­டிய அவ­சி­யம் வருங்­கா­லத்­தில் இருக்­காது.

அனு­மதி வாயில் வழி­யாக செல்­லும்­போது முகம், கரு­விழி ஆகிய அடை­யா­ளங்­க­ளைச் சரி­பார்த்து அவர்­க­ளுக்கு தானி­யக்க அனு­மதி அளிக்­கப்­படும்.

உள்­துறை துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம், இவ்­வாண்­டின் இறு­தி­யில் சாங்கி விமான நிலை­யத்­தில் சிறப்பு உதவி வழித்­த­டம் ஏற்படுத்தப்படும் என்றார்.