சிங்கப்பூரின் சிங்டெல் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து ஏர்டெல் முதலீடு பெற திட்டம்..!

Bharti Telecom has sought government nod for the infusion of Rs 4,900 crore investment from Singapore-based Singtel and other foreign entities.

வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முதலீட்டை பெற ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் நாட்டின் சிங்டெல் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஏர்டெல் ரூ.4,900 கோடி முதலீட்டை பெற திட்டமிட்டுள்ளது. எனவே இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தில் அதன் நிறுவனர் சுனில் பார்தி மிட்டலின் பங்கு 50% கீழ் குறையும் நிலை உருவாகும். வெளிநாட்டு நிறுவனத்தின் பங்கு 50% மேல் உயரும். இதனால் ஏர்டெல் வெளிநாட்டு நிறுவனமாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது நிலவரப்படி, ​​சுனில் பாரதி மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் பாரதி டெலிகாமில் 52 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

மேலும், பாரதி டெலிகாம் சுமார் 41 சதவீத பங்குகளை பாரதி ஏர்டெல்லில் வைத்துள்ளது, வெளிநாட்டு ப்ரோமோடோர்ஸ் கூட்டாக 21.46 சதவீத பங்குகளை தொலைத் தொடர்பு நிறுவனத்தில் வைத்துள்ளனர்.

இதற்கிடையில், பொது பங்குதாரர்கள் நிறுவனத்தில் சுமார் 37 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்று ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் அருகாமையில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நம் சிங்கப்பூர் தமிழர்களுக்கு பயனுள்ள தகவல்களை எங்களுடன் பகிரவும்.

WhatsApp  : wa.me/6588393569

Messenger : m.me/tamilmicsetsg