சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் – போலீசார் விசாரணை

aljunied-crescent-flat-dead-woman-found
Shin Min Daily News

அல்ஜூனிட் கிரசண்டில் உள்ள குடியிருப்பில் 69 வயதான பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, துர்நாற்றம் வீசியதை அடுத்து அவரின் சடலம் கண்டறியப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்ததாகவும், உடலில் ஏற்கனவே சிதைவு ஏற்பட்டதாகவும் ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

11 வது மாடியில் வசிக்கும் 70 வயதுடைய ஒருவரால் துர்நாற்றம் கண்டறியப்பட்டு, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 8ம் தேதி மதியம் 2:35 மணிக்கு இது குறித்து புகார் வந்ததாக போலீசார் உறுதி செய்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, இதில் எந்த சதிச்செயலும் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.