சிங்கப்பூரில் அனைத்து COVID-19 தடுப்பூசி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளது – அக்.10 முதல் அமல்

stallholders-heartland-coffeeshop quits-due-high-rents
Pic: Unsplash

சிங்கப்பூரில் விதிக்கப்பட்டு இருந்த அனைத்து COVID-19 தடுப்பூசி கட்டுப்பாடுகளும் அகற்றப்பட உள்ளதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

அந்த கட்டுப்பாடுகள் நீக்கம் வரும் அக்டோபர் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட சாதனங்கள் விற்பனை: 17 பேர் கைது

அகற்றப்பட உள்ள தடுப்பூசி கட்டுப்பாடுகள்

  • உணவகங்களில் உணவருந்துதல்
  • இரவு நேர கேளிக்கை நிலையங்களில் இருந்த கட்டுப்பாடுகள்
  • 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வுகள்

மேற்கண்டவைகளுக்கும் இனி கட்டுப்பாடுகள் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

COVID-19 வைரஸுடன் வாழ கற்றுக்கொண்டோம், பல தொற்று அலைகளை எதிர்கொண்டு, படிப்படியாக பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று (அக். 7) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் பரவல் மோசமடையும் பட்சத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரலாம் என்றும் MOH கூறியுள்ளது.

போலீஸ் ரைடு வருவது குறித்து ஊழியர்களுக்கு தகவல் கொடுத்த இருவருக்கு அபாரதம்