“அரிய வானியல் நிகழ்வு” – பிரம்மிப்பூட்டும் காட்சியைக் காண சிங்கப்பூர் தயாராகி வருகிறது..!

All eyes on Dec 26 'ring of fire' annular solar eclipse (Photo: Straits Times)

சிங்கப்பூர் முழுவதும் உள்ள அமைப்புகளும் பள்ளிகளும் “சிங்கப்பூரில் மிகப் பெரிய வானியல் நிகழ்வு” என்று அழைக்கப்படும் ஒரு அரிய மற்றும் கண்கவர் காட்சியைக் காண நாளை தயாராகி வருகின்றன.

இரண்டு தசாப்தங்களில் முதல்முறையாக, ஒரு அரிய “நெருப்பு வளையம்” காட்சிக்கு சிங்கப்பூர் தயார் ஆகி வருகிறது.

சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் நிலவு நேர்க்கோட்டில் வருவதால் இந்த சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

தேசிய ஜூனியர் கல்லூரியில் (என்.ஜே.சி), 56 மாணவர் தன்னார்வலர்கள் கடந்த டிசம்பர் 16 ம் தேதி மூன்று மணி நேர பயிற்சியில் கலந்து கொண்டனர், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிரகணக் காட்சி அமர்வை வழிநடத்த அவர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிகழ்வு சிங்கப்பூரில் அரியது என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.

சூரிய கிரகணம், காலை 11:27-க்குத் தொடங்கி, பிற்பகல் சுமார் 1:23-க்கு முழுமையடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சூரியன் 94 சதவீதம் மறைந்திருக்கும். அதனால் மாலை நேரத்தைப் போல் சற்று இருட்டாக இருக்கும். பின்னர் சந்திரன் விலகத் தொடங்கி, பிற்பகல் சுமார் 3:18-க்குக் கிரகணம் முடிவுறும் என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் கிரகணத்தை முறையான கருவிகளுடன் துணையுடன் தான் காணவேண்டும், என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மரினா அணைக்கட்டு, தேசியத் தொடக்கக் கல்லூரி, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம், ஜூரோங் லேக் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கிரகணத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் மீண்டும் சூரிய கிரகணத்தை 2063ஆம் ஆண்டில்தான் காணமுடியும்.