உக்ரைனுக்கு ஆம்புலன்ஸ்களை வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு!

உக்ரைனுக்கு ஆம்புலன்ஸ்களை வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு!
Photo: Singapore Red Cross

 

 

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஓராண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் அரசு, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.

சிங்கப்பூருக்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. இந்திய ஊழியர்களுக்கு அடிக்கும் அதிஷ்டம்

இந்தியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள், ரஷ்யா உடனடியாக உக்ரைன் மீதான போரை நிறுத்தி, அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன், ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடையை விதித்துள்ளனர்.

இந்த நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உக்ரைனின் கோரிக்கையை ஏற்று, சிங்கப்பூர் அரசு மருத்துவப் பொருட்களுடன் கூடிய 22 ஆம்புலன்ஸ்களை உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்க முடிவுச் செய்துள்ளது. சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், சிங்கப்பூர் அரசு வழங்கவுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தலைமை நீதிபதியுடன், இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திப்பு!

உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த ஆம்புலன்ஸ்கள், மருத்துவப் பொருட்கள் பேருதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.