சிங்கப்பூருடனான ஆந்திரப் பிரதேச அமராவதித் திட்டம் ரத்து.!

Andhra Pradesh cancels Amaravati city deal with Singapore consortium (PHOTO: SURBANA JURONG PRIVATE LIMITED)

தென்னிந்தியா ஆந்திர மாநில அரசு, தலைநகர் அமராவதியைக் கட்ட சிங்கப்பூர் மேம்பாட்டாளர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த திங்களன்று (நவ. 11) வெளியிடப்பட்ட உத்தரவில், 6.84 சதுர கி.மீ. தொடக்க பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் இருந்து அரசாங்கம் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் அமராவதித் திட்டத்தை ரத்து செய்ததால் இந்தியாவிலுள்ள சிங்கப்பூர் நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்கள் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரும் ஆந்திரப் பிரதேச மாநிலமும் இணைந்து பணியாற்றும் வகையில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் அமராவதி முதலீட்டு நிறுவனம் அவ்வாறு கூறியுள்ளது.

குறிப்பாக CapitaLand, Sembcorp ஆகிய சிங்கப்பூர் நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்கள் பாதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.