‘அங் மோ கியோ அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து’- 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

'அங் மோ கியோ அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து'- 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!
Photo: SCDF

 

சிங்கப்பூரில் உள்ள புளோக் 415 அங் மோ கியோ அவென்யூ10 (Block 415 Ang Mo Kio Avenue 10) அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (அக்.30) காலை 09.15 திடீர் விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

“புக்கிட் பாத்தோக் நூலகம் தற்காலிகமாக மூடப்படுகிறது”- தேசிய நூலக வாரியம் அறிவிப்பு!

இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிங்கப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னலில் இருந்து கரும்புகை வந்ததைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள், அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் நுழைந்து, தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்குள் சென்று சமையலறையில் ஏற்பட்ட தீயை தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தீயை முழுவதுமாக அணைத்தனர்.

'அங் மோ கியோ அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து'- 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!
Photo: Singapore Civil Defence Force

முன்னதாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுமார் 60 குடியிருப்பாளர்கள், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய நடைமுறைகள்.. வேலையிடங்களில் முறையாக பின்பற்றப்படுகிறதா?

சம்மந்தப்பட்ட குடியிருப்பில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.