அங் மோ கியோவில் பொங்கலைக் கொண்டாடிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

பிப்ரவரி 12- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள அங் மோ கியோவில் (Ang Mo Kio) பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கலந்துக் கொண்டார். அத்துடன், பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்த சிங்கப்பூர் அமைச்சர்கள்!

அங் மோ கியோ ஜிஆர்சி (Ang Mo Kio GRC), கெபுன் பாரு (Kebun Baru) மற்றும் யியோ சூ காங் எஸ்எம்சிக்களில் (Yio Chu Kang SMCs) ஆகிய குடியிருப்பாளர்கள் மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டனர்.

Photo: Singapore Prime Minister Official Facebook Page

பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பரத நாட்டியம், கரகாட்டம், குதிரையாட்டம், தப்பாட்டம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தனர். அதேபோல், கபடி, உறியடி உள்ளிட்ட தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றது. இதனை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கண்டுக்களித்தார்.

சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பினார் லாலு பிரசாத் யாதவ்!

அதைத் தொடர்ந்து, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மாட்டு தொழுவத்திற்கு சென்ற பிரதமர் லீ சியன் லூங், பசுவை பார்வையிட்டு, அதற்கு உணவளித்தார். பின்னர், பொங்கல் பானையில் வண்ணமிகு ஓவியங்களை வரைந்து மகிழ்ந்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்.

Photo: Singapore Prime Minister Official Facebook Page

பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டவர்கள் சிங்கப்பூர் பிரதமருடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

தை மாதத்தின் இறுதி நாளான நேற்று (பிப்.12) இந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.