முகநூல் நண்பனுக்கு பணம் அனுப்பிய 61 வயது பெண்! – நிறுவனத்தின் பணத்தை பரிமாற்றம் செய்தது தெரிய வந்தது

facebook friend money transfer - unsplash

சிங்கப்பூரில் முதலாளியின் பணத்தைத் திருட்டுத்தனமாக தனது ஆண் நண்பருக்கு கொடுத்த மூதாட்டி கைது செய்யப்பட்டார்.முதலாளியின் பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி, பின்னர் அதனைத் தனது ஆன்லைன் நண்பருக்கு அனுப்பியுள்ளார்

.217,000 வெள்ளிக்கும் அதிகமான பணத்தை இவ்வாறு அனுப்பிய குற்றத்திற்காக மூதாட்டிக்கு இரண்டு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.வோங் கோய் லிங் என்ற 61 வயது மூதாட்டி,அவர்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

‘ Angel accent’ என்ற நிறுவனத்தில் கணக்கியல் மேலாளராக வோங் பணிபுரிந்து வந்தார்.கடந்த 2019இல் முகநூல் வழியாக ராப் வால்டர் என்பவருடன் நட்பு கொண்டார்.ஸ்காட்லாந்தில் பணிபுரிவதாகக் கூறிய வால்டர் வோங்குடன் நெருக்கமாகினார்.

அதன் பின்னர் கிட்டத்தட்ட இருபது முறைக்கும் மேலாக நிறுவனத்திற்குச் சொந்தமான $217,000க்கும் அதிகமான பணத்தை வோங் தமது கணக்கிற்கு அனுப்பினார்.

அந்தப் பணப் பரிமாற்றம் தொடர்பான தரவுகள் நிறுவனத்தின் இயக்குனருக்கு வங்கித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.பின்னர்,வோங்கின் குற்றச்செயல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.