சிங்கப்பூரில் மீண்டும் Anime Festival Asia… அலைமோதிய மக்கள் கூட்டம்

Anime Festival Asia Long queues & massive crowds at Suntec

சிங்கப்பூரில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு Anime Festival Asia (AFA) நிகழ்ச்சி மீண்டும் நடைபெறுகிறது.

சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மற்றும் கண்காட்சி நிலையத்தில் அந்த நிகழ்வு நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதற்கு முன்னர் அதாவது 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அந்நிகழ்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை (நவ. 25) தொடங்கிய இந்த திருவிழா, நாளை ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) நிறைவடைகிறது.

இரண்டாவது நாளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக AFA குறிப்பிட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை (நவ. 26) அப்பகுதியைச் சேர்ந்த Anime ரசிகர்கள் நிகழ்ச்சி நடக்கும் மாநாட்டு நிலையத்தில் குவிந்ததால், அதன் நுழைவாயிலில் நீண்ட வரிசை காணப்பட்டது.