போதைப்பொருள் நடவடிக்கை தொடர்பாக ஏழு வெளிநாட்டவர்கள் கைது – மரண தண்டனையை கூட எதிர்கொள்ள நேரிடலாம்!

CNB

சிங்கப்பூரில் போதைப்பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கைகளில் 14 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) இன்று (மார்ச் 17) தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 10 மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக CNB தெரிவித்துள்ளது.

“மக்களைக் கொல்ல போறேன்” என போன் காலில் மிரட்டிய ஆடவர்: பெரிய ஆயுதத்துடன் கைது – சிறை!

மொத்தம் 280 கிராம் கொக்கெய்ன், 54 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விதைகள், தடைசெய்யப்பட்ட பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 245 கிராம் பிரவுன் பவுடர் ஆகியவை இதில் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் 28 முதல் 61 வயதுக்குட்பட்ட ஏழு வெளிநாட்டவர்கள் அடங்குவர்.

அவர்களிடம் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன என்று CNB தெரிவித்துள்ளது.

யாரேனும் 30 கிராமுக்கு அதிகமாக கொக்கெயின் போதைப்பொருள் கடத்தியதாகக் கண்டறியப்பட்டால், அவர்கள் கட்டாய மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

துணி காயவைக்கும் ரேக் பின்னால் நின்று தவறான செயல் செய்த ஆடவர்… நெட்டில் பரவிய வீடியோ – தூக்கிய போலீஸ்!