புலாவ் உபின் தீவில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ART கருவிகளை விநியோகிக்கும் தபால்காரர்

MCI by Terence Tan

சிங்கப்பூரில் உள்ள அனைத்து குடியிருப்புக்களுக்கும் ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) கருவிகளை சுகாதார அமைச்சகம் (MOH) விநியோகித்து வருகிறது.

சிங்கப்பூரின் பிரதான நிலப்பரப்பில் இல்லாத குடும்பங்களுக்கும் ART கருவி விநியோகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோதக் குழுக்களின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 9 ஆடவர்கள் கைது

ART கருவிகள் விநியோகம் என்பது சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதை உள்ளடக்கிய மிகப்பெரிய நடவடிக்கை என்று துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீயட்டின் முகநூல் பதிவில் பகிர்ந்துள்ளார்.

புலாவ் உபினில் (Pulau Ubin) உள்ள சிறிய சமூகம் உட்பட அனைத்து குடும்பங்களுக்கும் இந்த ART கருவி விநியோகம் செய்யப்படுகிறது. அங்கு சிங்கப்பூர் போஸ்ட்மேன், ஷாருதீன் மற்றும் சலே ஆகியோர் இணைந்து இந்தப் பணியைச் மேற்கொள்கின்றனர்.

புலாவ் உபினின் ஒரே ஒரு தபால்காரர் ஷாருதீன் ஆவார். தீவில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ART கருவிகளை விநியோகம் செய்ய சலே அவருக்கு உதவுகிறார்.

சிராங்கூன் சென்ட்ரலில் இரத்தம் சொட்ட சொட்ட சண்டையிட்டுக் கொண்ட ஆடவர்கள் கைது – (காணொளி)