கோவிட் இருக்கா ? ART கிட் மூலம் நீயே வீட்டுல பரிசோதனை பண்ணிக்கோ ! – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சுகாதார அமைச்சகம்

Testkits

ஜூலை 18 முதல் ஒவ்வொரு சிங்கப்பூர் குடியிருப்பு குடும்பமும் 10 ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் – ART கருவிகளை அஞ்சல் மூலம் பெறவிருக்கிறது. முதன்முதலில் இந்த விநியோகத்தை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த மாதம் அறிவித்தார்.

அதிகளவில் கருவிகள் விநியோகிக்கப்பட இருப்பதால், சில குடும்பங்கள் சோதனைக் கருவிகளைப் பெறுவதற்கு சில வாரங்கள் கூட ஆகலாம் என்று சுகாதார அமைச்சகமான MOH ஜூலை 15 அன்று பேஸ்புக் பதிவு ஒன்றில் கூறியது.

கோவிட்-19 க்கு ஆளாகியிருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், தொற்றுநோயைக் கண்டறிய சுய பரிசோதனை செய்யுங்கள். இது உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கவும், நோய் பரவுவதைத் தடுக்கவும் உதவுகிறது என்றும் MOH கூறியுள்ளது.

சுகாதார அமைச்சரான ஓங் இந்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் புதிய அலை உச்சத்தை எட்டுகிறது என்று கூறியிருந்தார். ஜூலை 13 அன்று, சிங்கப்பூரில் பதிவான 16,870 புதிய கோவிட்-19 வழக்குகள் இம்மாதத்தின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.