அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா நடைபெறும் என அறிவிப்பு!

Photo: Google Maps

சிங்கப்பூரின் செங்காங்கில் உள்ள 50 ரிவெர்வாலே கிரெசெண்ட்டில் (50 Rivervale Crescent, Sengkang) அமைந்துள்ளது அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம் (Arulmigu Velmurugan Gnanamuneeswarar Temple). இந்த ஆலயத்தில் வரும் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பெயரில் போலி இணையதளங்கள்- பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

இது தொடர்பாக அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 10- ஆம் தேதி ஏப்ரல் 23- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 12.27 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி) குருபகவான் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு பிரவேசிக்கிறார். அதனை முன்னிட்டு ஆலயத்தில் இரண்டு கால யாக பூஜை அபிஷேகம் வழிபாடுடன் குருபகவான் பரிகார ஹோமம் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் குருபெயர்ச்சி பரிகார அர்ச்சனையில் கலந்துக் கொண்டு குருகடாஷம் பெற வேண்டிக் கொள்கிறோம்.

Photo: Arulmigu Velmurugan Gnanamuneeswarar Temple Official Facebook Page

மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் தோஷ பரிகார ராசிகள் ஆகும். வரும் ஏப்ரல் 22- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்கு நவகிரஹ அபிஷேகமும், மாலை 06.15 மணிக்கு ஆலய நித்திய பூஜையும், மாலை 06.45 மணிக்கு உபாயத்தாரர் சங்கல்பம், முதல் கால யாக பூஜையும், இரவு 07.30 மணிக்கு நவகிரஹ தீபாராதனையும், இரவு 08.00 மணிக்கு பூர்ணானஹூதி உபய தீபாராதனையும், இரவு 08.30 மணிக்கு பிரசாதமும் வழங்கப்படும்.

“13 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

ஏப்ரல் 23- ஆம் தேதி அன்று காலை 08.30 அனுக்ஞை & சங்கல்பமும், காலை 09.00 மணிக்கு மஞ்சள் குட அபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், காலை 09.30 மணிக்கு கலச பூஜை குருமந்திர் ஹோமமும், காலை 10.00 மணிக்கு பூர்ணாஹூதி கலசாபிஷேகமும், காலை 10.30 மணிக்கு அலங்காரமும், காலை 11.00 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்படும். குரு பரிகார அர்ச்சனைக்கு பக்தர்கள் 11 வெள்ளியை செலுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.